" திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே தலைவனாகி விடலாம் என்று நினைப்பது அவமானம் " - சீமான்

" திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே தலைவனாகி விடலாம் என்று நினைப்பது  அவமானம் " - சீமான்

பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக இவர்கள் யாரும் ஊழலைப் பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,விவசாயிகளுக்கும் திமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை  என்றார். தனி பட்ஜெட் என்ற பெயரில் பட்ஜெட் மட்டும் தான் போடுவதாகவும்  வெறும் பட்ஜட்டை வைத்து விவசாயம் செய்ய முடியாது எனவும் சீமான் தெரிவித்தார்

மேலும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக பயன்படுத்த தெரியவில்லை எனவும் சீமான சாடினார். மேலும் பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக இவர்கள் யாரும் ஊழலைப் பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் என விமர்சித்தார். 

இதனைத்தொடர்ந்து,  நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து  கருத்து தெரிவித்த சீமான், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்றார். நடிகர் விஜய் மக்களுக்கு ஏதோ செய்ய நினைக்கிறார் என்றும்  நல்லது செய்ய நினைக்கிறவர்களை தட்டிக் கொடுக்க வேண்டுமே தவிர தள்ளி விடக்கூடாது என்றார். 

மற்றும், தமிழக அரசியல் சினிமா நோக்கி செல்வது ஒரு சாபக்கேடான விஷயம் என்றும் ஆதங்கம் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு திரைக்கவர்ச்சி, நுகர்வு கலாச்சாரம் அதிகமாக இருப்பது பேராபத்து  என்று சீமான் அச்சம் தெரிவித்தார்.

அதோடு, திரைப்படத்தில் நடிப்பதால் மட்டுமே ஒரு நாட்டை  ஒரு இனத்தை வழிநடத்துவதற்கு தலைவனாகி விடலாம் என்று நினைப்பது அவமானகரமானது என்றும் இதனை மாற்ற முயற்சி  செய்வோம் எனவும் சீமான கூறினார்.

 இதையும் படிக்க   |  "சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் பங்கேற்பார்...! " - தயாரிப்பாளர் கே ராஜன்.