கால் தேய்ந்தாலும்  பரவாயில்லை...கிராம கிராமமாக பாதயாத்திரை...போர்வையோடு கிளம்பப்போகிறோம்...அண்ணாமலை...!

தமிழகத்தில் 1 மெகா வாட் சோலார் யூனிட் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கால் தேய்ந்தாலும்  பரவாயில்லை...கிராம கிராமமாக பாதயாத்திரை...போர்வையோடு கிளம்பப்போகிறோம்...அண்ணாமலை...!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97வது பிறந்த நாள் விழாவில் பாஜக நில்லாட்சி தினமாக கொண்டாடி வருகின்றனர் சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 5 நபர்களுக்கு விருது வழங்கபட்டது., இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதன்பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

தமிழகத்தில் 1 மெகா வாட் சோலார் யூனிட் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது . கல்லா கட்டும் வேலையைத் தான் இங்கு உள்ளவர்கள் செய்து வருகின்றனர் என கூறினார்.

மேலும் பாஜக இப்போது தான் warm upல் உள்ளது என்றும் வரும் 13 ,14 ஆம் தேதியில் மதுரையில் தங்கப் போவதாகவும்,  இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் தங்கி அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதாகவும், காலே தேய்ந்தாலும் பரவாயில்லை போர்வையுடன் கிளம்ப போவதாகவும் அவர் தெரிவித்தார்.