கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மோசடி- சிபிசிஐடி விசாரணை நடத்த வலியுறுத்தல்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை குறித்து சிபிசிஐடி விசாரணையை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 கிராம் அளவுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கு ஈடாக பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக நிலுவை விபரங்களை ஆய்வுக்குட்படுத்திய போது ஏராளமான தவறுகளும், முறைகேடுகளும் நடந்துள்ளது தெரியவந்தது.

ஒரே நபர் 50க்கும் மேற்பட்ட கடன்களின் மூலம் 1 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளதும், போலி நகைகளின் மீதும், நகைகள் இல்லாமலேயே கடன் வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.