"மனைவிமார்கள் அதிக ஊதியம் பெறுவதால் விவாகரத்துகள் அதிகரித்துள்ளன" நீதிபதி வேதனை!!

தற்போது மனைவிமார்கள்  அதிகளவு ஊதியம் பெறுவதால்  விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன என்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கினார்.

இம்முகாமில் 2,900-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 441 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ. 9 கோடியே 25 லட்சத்து 14 ஆயிரத்து 343-க்கு தீர்வு காணப்பட்டது. 

அப்போது பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா "தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன. கணவரை விட மனைவிமார்கள் வேலைக்கு சென்று அதிகளவு ஊதியம் பெறுவதாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் ஈகோ பார்ப்பதாலும், விவாகரத்து வழக்குகள் அதிகளவில் நீதிமன்றத்திற்கு வருவதாக" வேதனை தெரிவித்துள்ளார்.