தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஏரி!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவு முழுவதும் பெய்த தொடர் கன மழையின் காரணமாக ஏரி நிரம்பி 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஏரி!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஓலப்பாளையம், தட்டான்குட்டை,  கத்தேரி, ஆனங்கூர்பிரிவு, உள்ளிட்ட நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்தது இந்நிலையில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீரானது.

35 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓலப்பாளையம் ஏரி நிரம்பி வரும் நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கம்பன் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள 100 மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் வடிகால் பணியில் நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று கத்தேரி ஏரி கொள்ளளவு எட்டியதை அடுத்து கொம்புபள்ளம் ஓடையில் நீர்வரத்து அதிகருத்துள்ளதால் இதனால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுப்பணித் துறையினர் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.