கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு... அரசு தரப்பு வழக்கறிஞர் முக்கிய பேட்டி....

கூடுதல் விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளதால் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேசுக்கு ஜாமின் வழங்க கூடாது என்று நீதிபதியிடம் தெரிவித்தாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு... அரசு தரப்பு வழக்கறிஞர் முக்கிய பேட்டி....

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை முக்கியமான கட்டத்தில் இருப்பதால் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ்க்கு ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பில் நீதிபதியிடம் எடுத்துரைத்ததாக வழக்கறிஞர் ஷாஜகான்  தெரிவித்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அரசுதரப்பு வழக்கறிஞா் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோா் ஆஜராகினர்.  எதிா்தரப்பு வழக்கிறிஞா்களும் ஆஜராயினர்.

குற்றம் சாட்டப்பட்ட 10 போ்களில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராயிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அரசுமற்றும் போலீசாா் தரப்பில் நீதிபதியிடம்  கால அவகாசம் கேட்ட நிலையில் வழக்கினை டிசம்பா் 23 ம்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார்.

பின்னா் அரசு தரப்பு வழக்கறிஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் பேசுகையில், இந்த வழக்கின் புலன் விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாலும், தற்சமயம் அவா்களை ஜாமீனில் விடுவதை விசாரணையை பொிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக குறிப்பிட்டார்.