ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி புலம்பெயர் தொழிலாளர் விவரங்கள் வைத்திருக்க வலியுறுத்தல்

ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி புலம்பெயர் தொழிலாளர் விவரங்கள் வைத்திருக்க வலியுறுத்தல்

புலம் பெயர் தொழிலாளர்கள் விவரவரங்கள் குறித்த பதிவை தேசிய அளவில் வைத்திருக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.


சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், பாதுகாப்பான இடம் பெயர்வுக்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில், ஆணையத் தலைவர் நீதியரசர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி, கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி எம்.பி? | Is Kanimozhi MP  becoming DMK deputy general secretary? - Vikatan

இந்நிகழ்வில் பேசிய கனிமொழி எம்.பி, உலகிலேயே அதிகளவில் புலம் பெயர்ந்தவர்கள் வாழும் நாடு இந்தியா. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வேலை செய்பவர்கள் உள்ளனர்.

மக்கள் பிரதிநிதியாக டெல்லியின் கலாச்சாரம் மொழி தெரியாமல் அலுவல் பணிக்காக டெல்லி செல்லும் போதே ஒரு வித அச்ச உணர்வு ஏற்படும். அதுபோன்று வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஒரு வித புது அச்ச உணர்வு ஏற்படும்

1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலம்  சென்றார்கள்: மக்களவையில் மத்திய அரசு தகவல் | Over 1 crore migrant labourers  return to home ...
கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெளி நாடுகளில் வீட்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை எத்தனையோ நாடுகளில் கேட்க கூட தயாராக இல்லை. ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் விவரவரங்கள் குறித்த பதிவை தேசிய அளவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வைத்திருக்க வேண்டும்

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் புலம் பெயர் தமிழர்களின் நலனை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி துறை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் சேவை புலம் பெயர் தொழிலார்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்த பெருமை மிகு மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மே- 1 உதயநிதியின் மாமன்னன் FIRST LOOK !!!


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி, "புலம் பெயர் தொழிலாளர்கள் தொடர்பான பெரும்பாலான சட்டங்கள் 40 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டவை. புலம் பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை: 'அரசும் அமைச்சர்களும் இரவுபகல் பாராமல்  உழைக்கிறார்கள்' - நீதிமன்றத்தில் மத்திய அரசு - BBC News தமிழ்

ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்திற்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்கள் விரவரங்கள் தரவுகள் குறித்த பதிவு தேசிய அளவில் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு பணிபுரிய வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் நாம் அழைத்து வரக்கூடிய விருந்தினர்கள் என்ற உணர்வுடன் பாதுகாக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்