" நீந்தி கரையை எட்டியவர் கருணாநிதி; குளத்தை மட்டுமல்ல, களத்தையும் " - வைரமுத்து புகழாரம்...!

" நீந்தி கரையை எட்டியவர் கருணாநிதி; குளத்தை மட்டுமல்ல, களத்தையும் " -  வைரமுத்து  புகழாரம்...!

கலைஞர் நூற்றாண்டு புகழ் பாடலை கவிஞர் வைரமுத்து மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ் இருவரும்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவின் ஒரு நிகழ்ச்சியாக கலைஞர்  புகழ் பாடலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்துகூறுகையில் :- 

" முதல்வர் மு க ஸ்டாலின் என்று ஒலித்தட்டை வெளியிட்டு இருக்கிறார். ஒலித்தட்டு  என்று சொல்வதை விட கலைஞர் நூற்றாண்டுக்கு கவிஞர்கள் செதுக்கி இருக்கக்கூடிய கல்வெட்டு என்று சொல்லலாம். முன்னணி இசையமைப்பாளர் பரத்வாஜ் கபிலன் இசைக்கு கவிஞர்கள்  நான், கபிலன், விவேகா,  உள்ளிட்ட நான்கு பேர் பாடல் எழுதி இருக்கிறோம், அந்த பாட்டிற்கும்  இசையமைத்திருக்கிறார் பரத்வாஜ். இந்த நான்கு பாடல்களும் கலைஞரின் புகழ் பாடும் பாடல் மட்டுமல்ல இளைஞர்களின் எழுச்சிகளையும் புதிய சமுதாயத்திற்கு நம்பிக்கை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும்.  இதை கலைஞரின் புகழாக பார்க்காமல் இளைஞர்களின் நம்பிக்கையாக பார்க்கும் பாடலாக தான் அமைந்திருக்கும்",  எனத்  தெரிவித்தார்.

மேலும் தமிழக ஆளுநர் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு , 

" எந்த ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக ஒருவர் வருகிறாரோ, அவர் அந்த மொழியோடும் மக்களின் மனிதாபிமானத்தோடும் ,மனத்தோடும், கலந்தவராக ஆளுநர் திகழ வேண்டும்" எனக் குறிப்பிட்டு 
" அப்படி திகழ்வதற்கு தமிழக ஆளுநர் முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்", என பதிலளித்தார். 

மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு  வருவாரா என கேள்வி எழுந்ததற்கு, 

" அரசியலுக்கு நடிகர்கள் வருவது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது, நான் அரசியலுக்கு வருவேனா என்றால் நான் பதில் சொல்லலாம், விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்டால் எனக்கு எப்படி தெரியும்? " என கேட்டு பதிலளித்திருந்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சென்னை பல்கலைக்கழகத்திற்கு கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு  அவரது பெயர் சூட்ட இருப்பதை வரவேற்பதாகவும்,  அதே சமயத்தில் திருவாரூரில் உள்ள கல்லூரிக்கு மத்திய பல்கலைக்கழகத்திற்கு அவர் பெயரை சூட்டுவது தான் மிகச் சரியாக இருக்கும் என்றதாகவும், ஆனால் அது ஒன்றிய அரசின் கைவசம் தான் உள்ளது என விமர்சித்தார்.  

மேலும், கலைஞர் கருணாநிதியை நினைவுகூர்ந்து , " திருவாரூர் குளத்தின் பெயர் கமலாலயம். முன்னோக்கிச் சென்று நீந்தி கரையை எட்டியவர் கருணாநிதி. குளத்தை மட்டுமல்ல, களத்தையும் " என கூறினார். 

அதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது குறித்து பேசியபோது, அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரப்படி கைது செய்திருந்தாலும், கைது செய்த முறை சரியா? என கேள்வி எழுப்பினார். அதோடு, அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதையும் பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தமாகும் எனவும் கருத்து தெரிவித்தார். 


 இதையும் படிக்க  | "2024 தேர்தலில் விஜய் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்" ரசிகர்கள் உற்சாகம்!