கரூர் மாணவி தற்கொலை...திடீர் விசிட் அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூரில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து குற்றவாளியை கண்டிப்பாக கண்டுபிடிப்போம். கவலை அடைய வேண்டாம் என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாணவி தற்கொலை...திடீர் விசிட் அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் வெண்ணைமலை செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, மாணவி கடந்த 19- ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்று வீடுக்கு வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பிற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் இனி யாருக்கும் நேர கூடாது. பாலியல் கொடுமைகளால் சாகும் கடைசி பெண் நானாக மட்டுமே இருக்க வேண்டும். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பற்றி பேசுவதற்கு கூட அச்சமாக இருக்கிறது என்று அவர் கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர், மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தையால் திட்டி இரவு முழுக்க காவல் நிலையத்தில் அமர வைத்த காவல் ஆய்வாளர் கண்ணதாசனை தமிழ்நாடு அரசு பணியிடை நீக்கம் செய்து உள்ளது.


தொடர்ந்து கரூர் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவியின் செல்போன் கைப்பற்றி பல கோணத்தில் கோணத்தில் இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து கருப்பு உடை அணிந்து கொட்டும் மழையிலும் பேருந்து நிலையம் முன் மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தையில் திட்டிய காவல் ஆய்வாளர் கண்ணதாசனே கைது செய்ய வேண்டும் எனவும் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இந்த சம்பவமறிந்த தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி, நேற்று இரவு  தற்கொலை செய்து கொண்ட மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் குற்றவாளியை கண்டிப்பாக கண்டுபிடிப்போம். கவலை அடைய வேண்டாம்,  அரசு உங்களுக்கு துணையாக இருக்கும் என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் தெரிவித்தார்.