காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை பலி...

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட குட்டி யானையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை பலி...

குமரி மாவட்டம் அடுத்த மோதிரமலை அருகே கோதமடக்கு அணை பகுதி உள்ளது.. இந்த பகுதியில் கடந்த 15 தினத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வந்தநிலையில், திடீரென கனமழை பெய்ய தொடங்கியது.

இதனால் அப்பகுதியில் காட்டாற்று வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்ட குட்டியானை இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியது. 

இதற்கிடையில் இறந்து மிதந்த குட்டி யானையில் உடலை பார்த்த பழங்குடியின மக்கள், களியல் சரக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் வந்த வனத்துறையினர்  6 மாத யானைக்குட்டி யானையின் சடலத்தை கைப்பற்றி களியல் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.