கொடைக்கானலில் களைக்கட்டிய கோடை விழா நிறைவு.. மலர் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!!

கொடைக்கானலில்  கோடை விழா களைக்கட்டிய நிலையில் இறுதி நாளன இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மலர்கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

கொடைக்கானலில் களைக்கட்டிய கோடை விழா நிறைவு.. மலர் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த 24 ஆம் தேதி கோடை விழா மலர் கண்காட்சியுடன் துவங்கியது.. தோட்டக்கலைத் துறை சார்பாக  முதன்முறையாக ஆறு நாட்கள் 6  நாட்கள் கண்காட்சி நடைபெற்றது.

இந்த ஆண்டு 3000 மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் கார்னேஷன் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இருந்த திருவள்ளுவர் சிலை மக்களை பெரிதும் கவர்ந்தது.

மேலும் சிறுவர்களை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த ஸ்பைடர்மேன் மற்றும் மோட்டு பப்லு உள்ளிட்ட தத்ரூப உருவங்கள் மக்களை பெரிதும் கவர்ந்தது. கோடைவிழாவை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்த நிலையில்  இன்றுடன் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது. இறுதி நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து  காணப்பட்டது. வார விடுமுறை என்பதால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனிடுயெ கோடை மலர்கண்காட்சியை சுமார்  1  லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர் என தோட்டக்கலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.