நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்...!

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்...!

ஜென்மாஷ்டமி என்றழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும்  உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக  இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.  அதன்படி, சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோவில் வளாக பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணர் பிறந்திருப்பது போன்றவை காட்சிப்படுத்தப்பட்டது.

இதேபோல்,  சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ணர் பிறந்ததை நினைவு கூறும் வகையில் காட்சியமைத்து பக்தர்கள் பூஜை  செய்தனர்.

இதையும் படிக்க : ”இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி” வைகோ கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை  பெரிய கடை வீதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோயிலில்  பால் அபிசேகம் ,வெண்ணைய் அபிசேகம் ,பன்னீர் அபிஷேகப் பொருட்களால்  அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் இருந்த சந்தான கோபால கிருஷ்ணன் சுவாமியை திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரியில் யாதவ மகா சபை பேரவை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த மாரத்தான் போட்டியில் முந்நூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.