"இந்த ஆட்சி தொடருமா?" கிருஷ்ணசாமி சந்தேகம்!

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திமுக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிகப்பெரிய ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி இந்த ஆட்சியை தொடருமா? நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார். 

சங்கரன் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், 2024 வரை திமுக இருக்குமா என்பதை மட்டுமே மு.க ஸ்டாலின் கவலை கொள்ள வேண்டும். ஏனெனில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவும், 2021 சட்டமன்ற தேர்தலின் போது என்னற்ற வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். 205 சட்டமன்ற வாக்குறுதிகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளும் காப்பாற்றப்படவில்லை. அடுத்து வந்த 30 மாதங்களில் திமுக மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகின்றன. திமுக அமைச்சர்கள் மீதும் குறிப்பாக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட ஊழல் வழக்குகள் டாஸ்மாக்கில் நடந்த 1 லட்சம் கோடி அளவிலான நூறு ஊழல்கள் உள்ளன. உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் நிறுவனங்களில் கடந்த ஒரு வாரமாக வருமான வரித்துறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் எண்ணற்ற தஸ்தாவேஜ்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஏறக்குறைய 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் கசிகின்றன என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், செந்தில் பாலாஜிக்காக துடித்தவர் பொன்முடிக்கு வாய் திறக்கவில்லை. ஜெகத்ரட்சகன் பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. மெல்ல மெல்ல வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திமுக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மிகப்பெரிய ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகி இந்த ஆட்சியை தொடருமா? நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடிக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இப்படிப்பட்ட சூழலில் தேசிய அளவிலான ஒரு கட்சி ஆட்சிக்கு வருமா? வராதா? என்பதை பற்றி இவர் கவலைப்பட வேண்டியதில்லை. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிகிறதா ஊழலற்ற ஆட்சியை தர முடிகிறதா என்பதைப் பற்றித்தான் அக்கறை கொள்ள வேண்டும் என்றார். 

இதையும் படிக்க: சுற்றி வந்த அமைச்சர்; விரட்டி பிடித்த விவசாயிகள்!