அடுத்த ஓராண்டுக்குள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு !

அடுத்த ஓராண்டுக்குள் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு !

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு பெருமாள் கோயிலுக்கு அடுத்த ஓராண்டுக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் ஊராட்சி செட்டிகுளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு பெருமாள் திருக்கோவிலை புனரமைக்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : எதிர்கட்சித் துணைத்தலைவர் விவகாரம்...அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அருள்மிகு பெருமாள் திருக்கோயிலுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் துறை சார்பில் தற்போது மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், தொல்லியல் துறை அனுமதி பெற்று மண்டல குழுவிடம் மதிப்பீடுகள் செய்து மாநில குழுவின் இறுதி ஒப்புதல் பெற்று இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பணிகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும்  கூறினார். மேலும், அடுத்த ஓராண்டிற்குள் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.