"கவுதமியின் புகார் விசாரிக்கப்படும்" எல்.முருகன்!

நடிகை கௌதமியின் புகார் குறித்து விசாரிக்கப்படும் என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

நடிகை கவுதமி, திடீரென பாஜகவின், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நீண்ட கடிதம் ஒன்றையும் பாஜக தலைமைக்கு எழுதியுள்ளர்.

அதில் 25 வருடமாக பாஜகவில் பணியாற்றி வரும்  தனது வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும், நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு கட்டத்தில் நிற்பதாகவும், ஆனால் கட்சி தலைவர்களிடம் இருந்து தனக்கு எந்த ஆதரவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க தன்னை தொடர்பு கொண்டதாகவும், அவரை நம்பி ஒப்படைத்த  சொத்துக்களை, பணத்தை  ஏமாற்றிவிட்டதகாவும் கவுதமி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேட்டில் உள்ள அரவது வீடு மற்றும் அலுவலகத்திற்கு, ஆயுத பூஜை வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை வீட்டின் முன்பாக இருந்த கொடி கம்பம் அகற்றப்பட்ட போது பாஜக நிர்வாகிகள் தாக்கப்பட்டதாகவும், பாஜகவினர் தாக்கப்படுவது குறித்து, ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

அத்துடன், நடிகை கௌதமி கட்சிக்காக அதிகம் உழைத்துள்ளார் என்றும், அவரது புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.