சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்..! காரணம் என்ன ?

சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்..! காரணம் என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பட்டா வழங்கியும் இடம் தரவில்லை என்று கூறி சார் ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள்   முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 43 வது வார்டிற்குட்பட்ட குருபட்டி என்னும் பகுதியில் 1998 ம் ஆண்டு 200 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அப்போது, வாக்குவாதத்தால் 100 நபர்களுக்கு பட்டா வழங்காமல், அரசின் பட்டாவை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

25 ஆண்டுகள் ஆனாலும் பட்டா வழங்கிய இடத்தையே காட்டவில்லை, அரசு ஆவணங்களில் ஏற்றவும் இல்லை என்பதால் பலரும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை இல்லை என்பதால் கவுன்சிலர் பாபுலால் தலைமையில் 100-க்கும் அதிகமான பெண்கள் உள்ளிட்டோர் ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர். பின்னர் சார் ஆட்சியர் திருமதி சரண்யாவிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, புதியதாக பட்டா கேட்பவர்களுக்கு ஒசூர் மாநகரில் பட்டா வழங்க முடியாது என்றும்,  ஏற்கனவே அரசு அதிகாரிகள் சார்பில் பட்டா வழங்கப்பட்டதாக கூறுபடுவது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க    | பொன்முடி மீதான மறு ஆய்வு வழக்கு ஒத்தி வைப்பு..!