கரை படியாத கைகளுக்கு சொந்த காரர்கள்....!!

கரை படியாத கைகளுக்கு சொந்த காரர்கள்....!!

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர்களை போற்றும் வகையில்  மே மாதம் 12ஆம் தேதி உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.  2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த செவிலியர், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு சென்னை அடையாரில் நடைபெற்றது.  இதில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்று விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மேடையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன், இருவரும் சேவை என்ற ஒன்றை தான் செய்கிறோம்.  மக்கள் பணிகளை செய்யும் நாங்கள், செவிலியர்கள் உங்களோடு ஒப்பிட்டால் தூசிலும் சிறியவை தான் எனப் பேசினார்.

மேலும் ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மக்கள் பணியில் ஓய்வு கிடையாது.  இவர்கள் பணிகளை எந்த பணிகளோடும் ஒப்பிட முடியாது.  உங்கள் அருமைகளை, பணிகளை  மக்கள் அறிந்தது கொரானா காலகட்டம் தான் எனக் கூறினார் தமிழச்சி தங்கபாண்டியன்.

தொடர்ந்து பேசிய அவர் நோய்தொற்று பரவிய நேரத்தில் உயிரை துச்சமென நினைத்து நேரம் காலம் பார்க்காமல், 24 மணிநேரமும் உழைத்த உங்களை இந்த நேரத்தில் பாராட்டி விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  குடும்பத்தை கவனித்து கொண்டு, செவிலியராக பணி ஆர்ருவதெல்லம் கடினமான ஒன்று.  எனக்கு செவிலி என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும், சங்க இலக்கியத்தில் செவிலி என்ற வார்த்தைக்கு மிகசிறந்த பாடல் உள்ளது எனவும் பேசினார்.

செவிலியர்கள் என்றாலே மனிதநேயம் இருப்பவர்கள் தான், அதனால்  தான் உள்ளவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  இந்த நாளில் உங்களுடன் பங்கேற்று விருது வழங்கியது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.  மேலும் கரை படியாத கைகளுக்கு சொந்த காரர்கள் செவிலியர்கள் தான் என்றும் கூறினார்.

இதையும் படிக்க:  சூடானில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்....!!