லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஏன்..? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அதனை திசை திருப்ப திமுக இதுபோன்ற பொய்யான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஏன்..? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்...

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், திமுக ஆட்சி அமைத்தது முதல் காழ்ப்புணர்ச்சியோடு அரசியலில் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் அதிமுகவை ஒடுக்க வேண்டும் என்று இந்த நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது. 500கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக வழங்கியுள்ளது. அதனை நிறைவேற்ற முடியாமல் மக்களை திசை திருப்பும் வகையில் இதுபோன்று தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை பணி செய்ய விடாமல் தடுக்க இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர், இதனையெல்லாம் அதிமுக எதிர்கொள்ளும்,நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்போம். லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிமுக பயப்படாது.

காவல்துறையை வைத்து அதிமுக வினரையும், முன்னாள் அமைச்சர்களையும் பயமுறுத்திவிடலாம் என்று நினைக்கலாம். அது ஒரு போதும் நடக்காது. திமுக அமைச்சர்கள் 23 பேர் மீது வழக்கு உள்ளது. திமுகவினர்கள் உத்தமர்களா? புத்தர்களா என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பினார்.