சாலையில் உல்லாசமாக சுற்றித் திரியும் சிறுத்தை…  

நெல்லை மாவட்டம் கோதையாறு வனப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தைகல் உல்லாசமாக சுற்றித் திரிகின்றன. சிறுத்தை ஒன்று வாகனங்களைக் கண்டும் அஞ்சாமல் செல்லும் அழகிய காட்சியை பயணி ஒருவர் காட்சியாக்கியுள்ளார்.

சாலையில் உல்லாசமாக சுற்றித் திரியும் சிறுத்தை…   

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதில் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட கோதையாறு மேலணையில் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியான கோதையாறு பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, காட்டுப்பன்றி, மிளா உள்ளிட்ட நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். நாலுமுக்கு பகுதியிலிருந்து கோதையாறு செல்லும் சாலையில் பல நாள்கள் பகலிலும், இரவிலும் சிறுத்தை நடமாட்டத்தை பலர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் காரில் வந்த சிலர் கோதையாறு சாலையில் இரவு நேரத்தில் நிதானமாக நடந்து சென்ற காட்சியைப் படமாக்கியுள்ளார். அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் நிலையில் அந்த வழியாகச் செல்பவர்களுக்கு வனவிலங்குகளால் ஒரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை. விலங்குகளைப் பார்ப்பவர்களும் அவற்றுக்கு இடையூறு செய்யாமல் அதைப் பார்த்து ரசித்து செல்கின்றனர்.