பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடல்..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

பல்வேறு மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடல்..!  தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

தமிழக அரசு 500 மதுபான கடைகளை மூடப்படும் என சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மாநிலத்தில் உள்ள மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்படும் என அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, 500 மதுபான சில்லறை விற்பனை கடைகளை கண்டறிந்து மூடிட அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி பல மாவட்டங்களில் மதுபானக்கடைகள் கண்டறியப்பட்டு இன்று மூடப்பட்டன. 

செங்கல்பட்டு: 4 மதுக்கடைகள் மூடல். 

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம், 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தன. இதில், 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும். என, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  அதன்படி,  செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில், ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை எண்: 4012, புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த கடை எண்கள்: 4013, 4555, பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த கடை எண்: 4033 ஆகிய கடைகள் மூடப்பட்டது.

நீலகிரி: 3 மதுபான கடைகள் மூடல். 

நீலகிரி மாவட்டத்தில் சா முக்கியமான சாலைகளிலும் கோவில் பள்ளி அருகாமையில் உள்ள அரசு மதுபான கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. குறிப்பாக உதகை நகரில் முக்கிய சாலையான லோயர் பசாரில் அமைந்துள்ள மதுபான கடை மற்றும் முக்கியமான கோவில் சாலையில் அமைந்துள்ள மதுபான கடை மற்றும் கூடலூர் அத்திப்பள்ளி, காளம்புழா பகுதியில் இயங்கி வந்த அரசு மதுபான கடை மூடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 3 மதுபான கடைகள் முக்கியமான பகுதியில் ஏங்கி வந்ததால் அப்பகுதியில் செல்லும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில் தற்போது இந்த கடைகள் மூடப்பட்டுள்ளதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாமக்கல்:   விற்பனை இல்லாத 18 அரசு மதுபான கடைகள் மூடல்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 187 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் இருந்து நாள்தோறும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டப்படி நாமக்கல் மாவட்டத்தில் 18 அரசு மதுபான கடைகள் இன்று முதல் செயல்படவில்லை. அதன்படி நாமக்கல் தாலுக்காவில் 8 கடைகளும் ராசிபுரம் தாலுக்காவில் 4 கடைகளும் திருச்செங்கோடு தாலுக்காவில் 5 கடைகளும் பரமத்திவேலூர் தாலுக்காவில் ஒரு கடையும் என மொத்தம் 18 கடைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. 

இந்நிலையில் இன்று மூடப்பட்ட  கடைகளிலும் போதிய விற்பனை இல்லாததாலும் ஒரே இடத்தில் இரண்டு கடைகள் செயல்படுவதால் அவற்றில் ஒன்றும் என மொத்தம் 18 கடைகளை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சாலைக்கு மிக அருகில் உள்ள கடைகளை அகற்றாமல் கண்துடைப்பிற்காக  விற்பனை இல்லாத கடைகள் மூடப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.


இதையும் படிக்க    | மத்திய அரசின் அனுமதியால் குஷியில் தமிழக அரசு...விரைவில் பணிகளை தொடங்க திட்டம்!