உள்ளாட்சி தேர்தல்: 74.37 % வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 புள்ளி 37 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று  நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 9 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்கு பதிவு நடைபெற்றது.

கொரோனா பாதித்த பகுதிகளில் கூடுதலாக ஒரு மணிநேரம் வாக்கு பதிவு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பின்னர் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக பதிவான வாக்குப் பதிவு விவரங்களை, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 81 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்த பட்சமாக, செங்கல்பட்டு மற்றும் நெல்லை மாவட்டத்தில் தலா 67 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.