உள்ளாட்சித் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  

உள்ளாட்சித் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. 

இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து பரிசீலனை செய்யபட்ட நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

அதன்படி  9 மாவட்டங்களில் மொத்தமிருந்த 27 ஆயிரத்து 2 பதவியிடங்களுக்கு 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 

அவர்களில் ஆயிரத்து 166 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 14 ஆயிரத்து 571  பேர் வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதாகவும், 

2 ஆயிரத்து 981 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.