லாக்டவுன் போதும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பழங்குடியின பட்டதாரி பெண்

கொரோனா பேரிடர் காலத்திலும் சிறுவர் சிறுமியர்களுக்கு பாடம் எடுத்து வரும் பழங்குடியின பட்டதாரி பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

லாக்டவுன் போதும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பழங்குடியின பட்டதாரி பெண்

கோவை மாவட்டம், வாளையாறு அருகே உள்ள சின்னாம்பதி பழங்குடி கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகளான சந்தியா, கிராமத்தின் முதல் பட்டதாரி ஆவார். 

தமிழக - கேரள எல்லையான இந்த மலை கிராமத்திற்கு நாள்தோறும் இரண்டு முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பெற்றோர்கள் உறுதுணையோடு பட்டப்படிப்பு முடித்துள்ள சந்தியா, படிக்கும் போதே அந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.

 இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால், சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்து வரும் சந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன