அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட எம்.ஐ.17 V5 !...

விபத்துக்குள்ளான Mi 17 V5 ஹெலிகாப்டரில் இருந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட எம்.ஐ.17 V5 !...

நீலகிரி மாவட்டம், குன்னூரில் விபத்தை சந்தித்த ஹெலிகாப்டர் Mi 17V5 என்ற வகையை சார்ந்தது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் ராணுவ துருப்புகளை இடமாற்றம் செய்வது, கண்காணிப்பு பணிகள், பேரிடரின்போது மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனவும், பாலைவனம், கடல் மேற்பரப்பு, வெப்பமண்டலம், குளிர் பகுதிகள் என எந்த காலநிலையையும் எதிர்கொண்டு, பயணிக்கும் ஆற்றல், இந்த ஹெலிகாப்டருக்கு உண்டு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிகபட்சமாக 13 ஆயிரம் கிலோ எடையை எம்.ஐ.17-ல் ஏற்ற முடியும் எனவும், 36 பேர் வரை அமர்ந்து செல்லும் வசதி கொண்டது இந்த ஹெலிகாப்டர்.  ஸ்லைடிங் கதவு, பாராசூட், அதிநவீன தேடுதல் கருவிகள், அவசர காலத்தில் தண்ணீர் பரப்பில் மிதக்கும் வசதி, நைட் விஷன், ரேடார், தானியங்கி பைலட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இந்த ஹெலிகாப்டரில் இடம்பெற்றுள்ளன.

மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் எம்.ஐ. 17 ஹெலிகாப்டர், 6 கிலோ மீட்டர் உயரம் வரை செல்லும் திறன் கொண்டது. தாக்குதலை பொருத்தவரையில், Shturm-V ஏவுகணைகள், S-8 ராக்கெட்டுகள், 23mm மெஷின் துப்பாக்கி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் துப்பாக்கிகளை, ஹெலிகாப்டரில் இருந்தவாறே கையாள முடியும்.  ஹெலிகாப்டரின் எரிபொருள் டேங்க், வெடித்து சிதறாத அளவுக்கு வேதியியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது Mi 17 V5 ஹெலிகாப்டர்.