பம்பரம் சின்னம் : வேறுபட்ட கருத்துகளை தொிவித்த மதிமுக நிா்வாகிகள்!

பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து மதிமுக நிா்வாகிகள் வேறுபட்ட கருத்துகளை தொிவித்த சம்பவம் தொண்டா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு சூரம்பட்டியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவை தலைவர் அர்ஜூனராஜ், திமுகவுடன் கூட்டணி வைக்கப்பட்டதற்கு பிறகு, நாம் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், பம்பரம் சின்னத்தை கைவிட்டதால், நம்முடைய தனிதன்மையை இழந்து விட்டோம். எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தில் உறுதியாக போட்டியிடுவோம் எனவும், அதற்கான முயற்சியை தொண்டர்கள் முன்னெடுக்க வேண்டும்  என வலியுறுத்தினாா். 

இதையும் படிக்க : 1- 5-ம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கட்சி நிா்வாகியும், நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி, மதிமுக நிர்வாகிகள் தேர்தல் களத்தில் பணியாற்றுவது என்பது குறைவாக இருப்பதாலும், நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சி பணியாற்றுவதற்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் போதுமானதாக இல்லை என்பதாலும் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து நாம் எப்படி வலியுறுத்த முடியும்? திமுகவுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம் என்று கூறினார். மேலும், பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றாா். 

பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து மதிமுக நிா்வாகிகள் வேறுபட்ட கருத்துகளை தொிவித்த சம்பவம் தொண்டா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.