கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. தனபால், ரமேஷுக்கு நிபந்தனை ஜாமீன்!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. தனபால், ரமேஷுக்கு நிபந்தனை ஜாமீன்!!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஆதாரங்களை அழித்ததாக கைது செய்யப்பட்டனர்.

நிபந்தனை ஜாமீன்:

தொடர்ந்து இருவரும் ஒவ்வொரு திங்கட் கிழமையும் ஊட்டியிலேயே தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் விதித்தது.

நிபந்தனைகளை தளர்த்திய நீதிபதிகள்:

இந்நிலையில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஊட்டியில் தங்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ம் தேதிகளில் மட்டும் சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனைகளை நீதிபதி தளர்த்தினார்.

நீலகிரி நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல், இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.