தங்கம் போல மாறி வரும் மல்லிகை!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூபாய் 2300 வரை விற்க்கப்படுகிறது இதுவே இந்த ஆண்டின் உச்சகட்டவிலையை எட்டியுள்ளது.

தங்கம் போல மாறி வரும் மல்லிகை!!!

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற மலர் சந்தையாக மாட்டுத்தாவணி மலர் சந்தை இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் மழை பொழிந்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

அதே சமயம் அடுத்தடுத்து முகூர்த்த நாள் வருகிற காரணத்தினாலும் பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டில், மிக உச்சக்கட்ட விலையாக ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 2300 க்கு இன்று விற்கப்படுகிறது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இது ஆவணி மாதம் என்கிற காரணத்தினால் அடுத்தடுத்த முகூர்த்த நாட்கள் வரவிருக்கிற காரணத்தினால் பூக்களின் வரத்து குறைவாக இருப்பதாலும், இன்னும் மல்லிகை பூ உட்பட அனைத்து பூக்களின் விலையும் உயர்வதற்காக வாய்ப்பு இருக்கிறது என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இல்லம் தோறும் தேடிச் சென்று விற்கும் வியாபாரிகள் பூக்களை வாங்குவதில் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று வரை 1300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப்பூ ஒரே நாளில் ரூபாய் 2300 விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது