மதுரை : சுங்கச்சாவடி ஊழியர் மீது மோதிய கனரக வாகனம்..! பதற வைக்கும் சிசிடிவி காட்சி...

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர் மீது கனரக வாகனம் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த ஊழியர் விபத்தில் இருந்து அதிர்ஷ்டமாக உயிர் தப்பியுள்ளார்.

மதுரை : சுங்கச்சாவடி ஊழியர் மீது மோதிய கனரக வாகனம்..! பதற வைக்கும் சிசிடிவி காட்சி...

கப்பலூர் சுங்கச்சாவடி: 

மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை நாள்தோறும், பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. முன்னதாக, திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், அரசு விதிமுறையை மீறி,  கட்டப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என பல்வேறு போராட்டங்களும்  நடத்தியுள்ளனர். 

விபத்து :

இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் நேற்று, அதிகாலை 3 மணி அளவில் காய்கறிகளை ஏற்றி கொண்டு ஒரு கனரக லாரி வந்துள்ளது. அப்போது சுங்க கட்டணம் செலுத்த நின்றுகொண்டிருந்த போது ஃபாஸ்ட் டேக் சரிவர செயல்படாததால், சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் தான் வைத்திருக்கும் ஸ்கேனிங் கருவி மூலம் கனரக வாகனத்தில் ஒட்டப்பட்டு இருந்த ஃபாஸ்ட்ராக் கோடு லேபிளை ஸ்கேன் செய்ய வாகனத்தின் முன் நின்றுகொண்டிருந்தார். அந்த லாரிக்கு பின்னால் வந்த மற்றொரு வாகனம் மோதியது. அதில், காய்கறி லாரிக்கு முன் நின்றுகொண்டிருந்த ஊழியர், தடுப்பை தாண்டி தூக்கி வீசப்பட்டார். அந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.  

உயிர் தப்பிய ஊழியர் : 

இந்த விபத்தில், சுங்கச்சாவடி ஊழியர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்து குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.