இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற நபர் கைது!!

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற நபர் கைது!!

இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் சமந்தன் கடந்த 2001ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை வந்துள்ளார். இதையடுத்து சென்னையில் பல இடங்களில் வேலை தேடி அலைந்தும் வேலை கிடைக்காததால் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து பின்னர் இந்தப் பகுதியில் வேலை தேடி வேலை கிடைக்காததால் இங்கு இருந்து ஓசூர் பகுதிக்கு சென்று போர்வெல் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த சமந்தனுடைய பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அவரின்  உடமைகள் திருடு போனதாக தெரியவருகிறது. இதையடுத்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முடிவெடுத்த சமந்தன் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்து உள்ளார்.

இதையடுத்து சந்தேகத்திற்கிடமாக தனுஷ்கோடி பகுதியில் ஒருவர் சுற்றி திரிவதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற சமந்தனை  கைது செய்து ராமேஸ்வரம் மரைன்  காவல் நிலையத்திற்கு  கொண்டு வந்து விசாரணையில்  ஈடுபட்டு வருகின்றனர்.