உலக ஆட்டிசம் தினம்: சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி...!

உலக ஆட்டிசம் தினம்: சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி...!

சென்னையில் சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 


உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு, பள்ளிகரணை தனியார் கல்லூரி வளாகத்தில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையிலும் சிறப்பு குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

இதையும் படிக்க : பேனா சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம் - சீமான் கண்டனம்!

மனுஷியா பிளாசம் ஆயுஷ் ஹெல்த் கேர், சக்கரம் பவுண்டேஷன் மற்றும் தாகூர் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய இந்த போட்டியை, தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார் ஐ. ஏ.எஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தனர்.