மாரிதாஸ் மீது குண்டர் சட்டம்? அண்ணாமலை ஆளுநரை சந்தித்த பின்னணி என்ன?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாரிதாஸ் கைது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.

மாரிதாஸ் மீது குண்டர் சட்டம்? அண்ணாமலை ஆளுநரை சந்தித்த பின்னணி என்ன?

சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் அறிமுகமான மாரிதாஸ்  9ஆம் தேதி மதுரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளைச் சிறையில் வரும் 23ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறையில் இருக்கும் மாரிதாசுக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாரிதாஸ் மீதுள்ள வழக்குகளை ஒருங்கிணைந்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

 மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடக்கூடாது என்பதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக இருப்பதாகவும். இதற்காக இன்று  பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் கமலாலயத்தில் வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.இதனையடுத்து இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக பேசிய கிஷோர்.கே.சுவாமி மற்றும்  பாஜக கட்சி நிர்வாகி கல்யாணராமன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள நிலையில் மாரிதாஸ் மீதும் குண்டர் சட்டம் பயாமால் இருக்க அண்ணாமலை ஆளுநரை  சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன.  இந்த நிலையில் மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்வதைத் தடுக்க விரும்புகிறார் அண்ணாமலை.

இதற்காகவே அவர் கருத்துரிமை என்ற வகையில் மாரிதாசுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு...‌‌மாரிதாசை விட 100 மடங்கு கடுமையான பதிவுகளைச் செய்தவர்கள் பற்றிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும்  மாரிதாசை குண்டர் சட்டத்தில் அடைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவசரமாக இன்று ஆளுநரை சந்தித்துள்ளதாக  தகவல்கள் கசிந்துள்ளன.