மார்ட்டினின் மருமகன் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற அமலாகத்துறையின் சோதனை நிறைவு..!

மார்ட்டினின் மருமகன் வீடு,  அலுவலகத்தில் நடைபெற்ற அமலாகத்துறையின் சோதனை நிறைவு..!

சட்டவிரோத பணபறிமாற்றம் வழக்கில் சென்னையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாகத்துறையின் சோதனை நிறைவு பெற்றுள்ளது.

சென்னை போயஸ் தோட்டம் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

ஏற்கனவே அமலாக்க துறையினர் பல்வேறு கட்டங்களாக தொடர் விசாரணையையும், சோதனையையும் மேற்கொண்ட நிலையில் நேற்று முன் தினம் முதல் மீண்டும் அமலாக்கத்துறையினர்  சோதனை நடத்தினர்.குறிப்பாக 2009 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு கால கட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி மார்ட்டின் 910 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியதாக அவர் மீது புகார் எழுந்தது. 

இதன் மூலம் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகாரை எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்திய நிலையில் மீண்டும் சோதனையை நடத்தினர்.  

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றியதாக அமலாக்கதுறையினர் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் கணக்கில் காட்டாத பணம்,நகைகள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க   | ஹோம் வொர்க் செய்யாத மாணவியின் கையை முறித்த ஆசிரியை!