தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள்; இராமநாதபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு!

தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள்; இராமநாதபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி நகர் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள், இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது சொந்த ஊரான செல்லூர் கிராமத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மானுவேல் சேகரனாரின் மகள் பிரபாராணி, உறவினர்கள் மற்றும்  கிராமத்தினர் அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ்,  ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட 161 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தை திடல் உள்ளிட்ட 25 இடங்களில் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:ஏ.ஆர் ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி!