பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழப்பு...அறிக்கை வெளியிட்ட அமைச்சர்!

பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழப்பு...அறிக்கை வெளியிட்ட அமைச்சர்!

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் எதிர்பாராத விதமாக மவுலீஸ்வரன் என்ற மாணவன் உயிரிழந்தார்.

இதையும் படிக்க : என்னை சிறையில் அடைக்கலாம்...மனஉறுதியை உடைக்க முடியாது - மணீஷ் சிசோடியா ட்வீட்!

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளிட்டுள்ள அறிக்கையில், மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள அவர், இந்த சம்பவம் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வின்போது பணியில் கவனக் குறைவாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.