மருத்துவ பணியாளர்கள் எம்.ஆர்.பி. மூலம் நேரடியாக தேர்வு... சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்...

கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் அதிகப்படியாக மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இதனை மாற்றி நேரடியாக எம்ஆர்பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் எம்.ஆர்.பி. மூலம் நேரடியாக தேர்வு... சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்...
கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு மருத்துவ நட்சத்திரம் வழங்கும் விருது, சென்னை எம்ஜி ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் 72 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்ததாகவும், அதில் 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பாக ஒதுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
 
கடந்த ஆட்சியில் ஒப்பந்த அடிப்படையில் அதிகப்படியான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர் மா. சுப்ரமணியன், இதனை மாற்றி எம். ஆர்.பி. மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, ஒளிவு மறைவில்லாமல் இடமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.