காவலர்களின் சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு!

காவலர்களின் சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு!

தமிழ்நாடு காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை மருத்துவ நிவாரண உச்சவரம்பு 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பு, இதுவரை மொத்த பணிக் காலத்தில் 5 லட்சமாக ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க : ஒரே நாளில் 7 பதக்கம் வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தல்...!

இந்நிலையில் நேற்று முன்தினம் இயக்குநர் அலுவலகத்தில் நடந்த காவலர் சேமநல நிதி கலந்தாய்வு கூட்டத்தில், உச்சவரம்பு தொகையை 8 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து காவலர்களின் மொத்த பணிக்காலத்தில் 3 முறை 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்வது 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.