வாரசந்தையில் காய்கறி மற்றும் கருவாடு வாங்க குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்.!

கடலூர் அருகே பொங்கலையொட்டி வாரசந்தையில் காய்கறிகள் மற்றும் கருவாடு வாங்க பொதுமக்கள் திரண்டனர்.

வாரசந்தையில் காய்கறி மற்றும் கருவாடு வாங்க குவிந்த வியாபாரிகள், பொதுமக்கள்.!

கடலூர் அடுத்த காராமணிக் குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு கடலூர் மற்றும் பண்ருட்டி, புதுச்சேரி பகுதிகளில் இருந்து காய்கறி, பழ வியாபாரிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

வருகிற 14-ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானை, கரும்பு மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.


இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து  இன்று அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் ஏராளமானோர் திரண்டனர்.

பின்னர் வருகிற வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான பானைகள், கரும்பு, காய்கறி வகைகள் மாட்டு பொங்கலுக்கு தேவையான  புதிய பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் வாங்கி சென்றனர்.

இந்த வாரம் முழுவதும் பண்டிகை காலம் இருப்பதால் வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான கருவாடுகள் அதிக அளவில் வாங்கி சென்றனர். 

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளி இல்லாமல் பலபேர் முகக் கவசம் அணியாமல் வந்ததால் சந்தை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது மேலும் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.