மாதவரம்  -தரமணி மெட்ரோ ரயில் சேவை...! ஒப்பந்ததாரர்களை இறுதி செய்தது நிர்வாகம்...!! 

மாதவரம்  -தரமணி மெட்ரோ ரயில் சேவை...! ஒப்பந்ததாரர்களை இறுதி செய்தது நிர்வாகம்...!! 

மாதவரம்  தரமணி  வரையிலான வழித்தடத்தில்  29  சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்ததாரர்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இறுதி செய்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் (இரண்டாம் கட்ட) திட்டத்தின் கீழ் மாதவரம் -  தரமணி வரையிலான வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன. இதில் மாதவரம் முதல் சிப்காட் வரை (45.8 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை (26.1 கி.மீ), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ) என மொத்தம் 118.9 கி.மீ நீளத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்ட பணிகளை மேற்கொள்ள 61,843 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாதவரம் -தரமணி வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான சுரங்கும் தோண்டும் வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களை இறுதி செய்யும் பணி ஓராண்டுக்கு மேலாக காலதாமதமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த  2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இந்த வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு இருந்த நிலையில், அந்தப் பணிகளை செய்வதற்காக ஐந்து நிறுவனங்கள் டெண்டர் கோரி இருந்தன. இருப்பினும் இந்நிறுவனங்கள் கொடுத்த டெண்டர் தொகை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிர்ணயித்த டெண்டர் தொகையோடு ஒத்துப் போகாததால் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி காலதாமதம் ஆகி வந்தது.Chennai Metro Rail Plans To Build Skywalks Near Phase-2 Metro Stations

இந்நிலையில் தற்பொழுது மாதவரம் -தரமணி வரையிலான வழித்தடத்தில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அதன்படி  மாதவரம் முதல் பெரம்பூர் வரையிலான வழித்தடத்தில் தினேஷ் சந்திர அகர்வாலினுடைய இன்பிராகோன் & சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அயனாவரம் - கெல்லிஸ் வழித்தடத்தில் டாட்டா ப்ராஜக்ட்ஸ் நிறுவனமும்,  
கே எம் சி - ராயப்பேட்டை, ஆர் கே சாலை- அடையார் சந்திப்பு மற்றும் அடையார் டிப்போ - தரமணி வரையிலான வழித்தடங்களில் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனமும் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்க உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்குள் இந்த வழித்தடங்களில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என இந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்  மூலம் மாதவரம் -  தரமணி வழித்தடத்தில் 29 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க:கீழ்பவானி ஆற்றை கான்கிரீட் தளமாக மாற்றும் முயற்சி...! கைவிட சீமான் வலியுறுத்தல்...!!