வெள்ள அபாயம்!!! பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!!!

பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து, பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ள அபாயம்!!! பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்!!!

கேரளாவில் பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து விநாடிக்கு பில்லூர் 6000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளாக இருக்கின்ற கேரள மாநிலம் அட்டப்பாடி, முக்காலி, மட்டத்துகாடு போன்ற பகுதிகளில் தற்போது பருவமழை பெய்து வருகிறது.

மேலும் படிக்க | நாமக்கல் : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்...முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்...!

இதனைத் தொடர்ந்து, பில்லூர் அணைக்கான நீர் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் அணைக்கான நீர் வரத்து 6000 கன அடியாக விநாடிக்கு அதிகரித்தது. இதனால் பில்லூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்த நிலையில் இதன் முழுகொள்ளளவான 100அடியில் 97அடி வரை தண்ணீர் நிரம்பியது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நான்கு மதகுகள் வழியாக 6000கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் உபரியாக திறக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் இல்லை - மாவட்ட ஆட்சியர்

இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை திறக்கபட்டுள்ளதால் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.