பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்...மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!

பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்...மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!

இன்று 12 வது பொதுத்தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகளிடம் தேர்வு குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டறிந்தார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. அதன்படி, மொழித்தாள் - I தேர்வு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது.

இதையும் படிக்க : ஈ.பி.எஸ். உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு...தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில், திருச்சி ஆர் சி  மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத் தேர்வை எழுதி முடித்த மாணவ மாணவிகளிடம் வினாத் தாளை வாங்கிப் படித்து விட்டு தேர்வு குறித்து கேட்டறிந்தார்.

தேர்வு ஈசியாக இருந்ததா எல்லா கேள்வியும் முடித்தீர்களா? எக்ஸாம் எப்படி பண்ணீங்க? ஈசியாக இருந்ததா? படித்த கேள்வி எல்லாம் வந்திருந்ததா? ஒரு மார்க் கடினமாக இருந்ததா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, நல்லா படியுங்கள்... இந்த தேர்வை போலவே, மற்ற தேர்வுகளையும் நன்றாக எழுதுமாறு வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.