உலக குருதி கொடையாளர் தினம்: குருதி தானம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஆதாரம்  இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக குருதி கொடையாளர் தினம்: குருதி தானம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு  சென்னை எழும்பூரில் அமைச்சர் மா சுப்பிரமணியன் குருதி தானம் அளித்தார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகமும் ரத்த தானம் செய்தார். 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும் ஊட்டச்சத்து மாவு குறித்து அரசு மீது ஆதராமின்றி குற்றம்சுமத்திய பாஜக தலைவர்  அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மா. சுப்பிரமணியன் எசச்ரித்துள்ளார்.

திருவாரூரில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறந்தது வருந்ததக்கது என குறிப்பிட்ட மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் பணி நேரத்தில் வராமல் இருந்தால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் ஈரோடு சிறுமி கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..