"போக்குவரத்து தொழில் நாட்டிற்கு முதுகெலும்பு போன்றது" அமைச்சர் சிவசங்கர்!

போக்குவரத்து தொழில் என்பது மிக முக்கியமானது, நாட்டிற்கு முதுகெலும்பு போன்றது என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ட்ரக் ,டிரெய்லர் ,டிப்பர், டேங்கர் , கண்டெய்னர் போன்ற வணிகப் பயன்பாட்டு வாகனங்களுக்கான சர்வதேச கண்காட்சி நடைபெற்றது இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற வேலையில், போக்குவரத்து தொழில் என்பது மிக முக்கியமானது, நாட்டிற்கு முதுகெலும்பு போன்றது. அந்த வகையில் இந்த கண்காட்சி ஏற்படுத்திய நிறுவனத்திற்கும் இதில் கலந்து கொண்டிருப்பவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலக அளவில் மின்சார பேருந்து பயன்படுத்துவது பரவலாக இருக்கிறது. இன்று காலையில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தை அவர்கள் எந்த நிறுவனத்தில் அந்த பேருந்து வாங்கினார்கள் என்று ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம். தமிழக அரசு சார்பாக வாங்கப்படும் பேருந்துகள் முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தான் வாங்கப்படும் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவித்தார்.

தொலைதூரப் பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களில் உள்ள கழிப்பறைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, புகாரையடுத்து திண்டிவனத்தில் இரண்டு உணவகங்கள் மூடப்பட்டிருக்கிறது எனவும், மேலும் அது போன்ற புகார்கள் வந்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:"ரயில் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை" மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!