நீலகிரியில் சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கா. ராமச்சந்திரன்!

நீலகிரியில் சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கா. ராமச்சந்திரன்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சியில் சுமார் 44 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சியில் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நீலகிரி எம்.பி ஆ.ராசா மற்றும் தமிழ்நாடு  சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அம்ரூத், தூய்மை பாரத இயக்கம், குன்னூர் சட்டமன்ற நிதியின் மூலம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கோத்தகிரி பேரூராட்சியில் முக்கிய பகுதியில் நீர்வளங்கள் அமைப்புகளை சீரமைத்தல்,  வள மீட்பு பூங்காவில் தளம் மற்றும் மேற்கூரை அமைத்தல், கன்னிகா தேவி காலனி சமுதாய கூடம் கட்டுதல், தாந்தநாடு பகுதியில் சமுதாய கூடம், ஹோப் பார்க் பகுதியில் சாலை வசதி, குப்பட்டிக்கம்பை பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல் என சுமார் 44.51 கோடி மதிப்பு அளவில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அரசு அதிகாரிகள்,மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: இனிமேல் சென்னையில் வெள்ளத்துக்கு ரெட் கார்டு..? மக்களுக்கு கைகொடுக்குமா ’ஸ்பாஞ்ச் பார்க்’ திட்டம்..?