கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை... தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை.

நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் (பிஎட்) தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை... தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை.
நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் (பிஎட்) தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித் துறையில் இருக்கும் பிஎட் ஆசிரியர் படிப்புக்கான ஆண்டுக்கு 30 ஆயிரம் மேல் தனியார் கல்லூரிகள் வசூலிக்க கூடாது என்றும்,கூடுதல் தொகை வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
 
மேலும், முதலமைச்சரின் உத்தரவின் படி பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு கல்வி கட்டணம் 75 % மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
கடந்த ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறையில் பல்வேறு பணி நியமனங்கள் முறைகேடுகள் நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் தங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், இது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
 
பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி உதவி மையங்கள் மூலம் நேரடியாக கொடுக்கலாம் என கூறிய அவர்,உயர்கல்வித்துறை  பாடப் புத்தகத்திலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அச்சிடப்படும் எனவும் கூறினார்.
 
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உள்ள ச்சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்த பாடப்புத்தகங்களில் பல்வேறு தவறுகள் நடைபெற்றுள்ளதாகவும்,அதனை சரிசெய்து புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது என்றும்,கல்லூரிகள் திறப்பது குறித்து கொரோனா பரவல் குறைந்த பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.