ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்...!!!

ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்...!!!

ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் நாளை கையெழுத்தாகவுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தன்னுடைய அடுத்த கட்ட மெகா முதலீட்டை அறிவிக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.  மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கும் அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் மற்றும் ஹைட்ரஜன் இயக்கம் போன்ற மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்களில் ரூபாய் 15,000 கோடிக்கும் குறையாத வகையில் முதலீடுகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் நாளை சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.  அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் நிறுவனம் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

HMIL இதுவரை $4 பில்லியன் முதலீடு செய்துள்ளது.  சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அதன் தொழிற்சாலை ஹூண்டாய் குழுமத்தின் முதல் முழுமையான ஒருங்கிணைந்த உற்பத்தி வசதி மற்றும் கொரியாவிற்கு வெளியே இரண்டாவது பெரிய வசதி, 740,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்தியாவிலிருந்து பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாகவும் உள்ளது.

2022ம் ஆண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 7,00,811 யூனிட்டுகளாக இருந்தது. அதன் படி, 2021ம் ஆண்டு விற்பனையை விட 10.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்....!!