மயிலாடுதுறையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம் துவக்கம்..!

மயிலாடுதுறையில்  நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனம் துவக்கம்..!

மயிலாடுதுறையில் உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

மயிலாடுதுறை மாவட்டத்தில் உணவு தர பரிசோதனை மேற்கொள்வதற்காக நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று வாகன சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார். உணவுகளின் தரம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் உணவகங்களில் கலப்படம் இன்றி உணவுகள் தயாரிக்கப்படுகிறதா?  என்பதை இந்த வாகனம் மூலம் இம்மாதம் முழுவதும் அதிகாரிகள் பரிசோதனை செய்ய உள்ளனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கண்டறியும் முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் அதிகாரிகள் டீ தூள் மற்றும் பருப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றை தரம் பிரித்து போலியானவை எது?  என கண்டறிவது தொடர்பாக செய்முறை விளக்கம் அளித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க   |  சரியாக பணிகளை செய்யாத அதிகாரிகளை கடுமையாக சாடிய ஆவடி மேயர்...!