நாளை முதல் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு...!

நாளை முதல் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வருகிற 11-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வருகிற 11 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : டிஐஜி இறுதிச் சடங்கிற்காக தேனி செல்லும் டிஜிபி சங்கர் ஜிவால்...!

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது