தோல்வியே அறியாத பிரதமர் மோடி!

தோல்வியே அறியாத பிரதமர் மோடி!

தற்போதைய கு ஜராத் மாநிலத்தின் வாட் நகரில் கடந்த 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி, தாமோதரதாஸ் முல்சந்த் மோடி – ஹிராபென் மோடி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி. நடுத்தர குடும்பத்தில் 6 குழந்தைகளில் 3-வது குழந்தையாக பிறந்த நரேந்திர மோடி, தனது உயர்நிலைக் கல்வியை வாட்நகரில் நிறைவு செய்தார். 

நடிப்பின் மீதான தீராத காதல் காரணமாக நாடகத் துறையில் கால் பதித்த நரேந்திர மோடிக்கு, அரசியல் பிம்பம் எளிதில் கைவரப் பெற்றதாக அவரது ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இளமைக் காலத்தில் வத்நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை வைத்திருந்த தேநீர் கடையில் பணியாற்றினார். அதே நேரத்தில், நரேந்திர மோடி தேநீர் கடையில் பணியாற்றியதை அவரது சகோதரர் பிரகலாத் மோடி மறுத்துள்ளார்.

தனது 8-ஆம் வயதில் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தில் அறிமுகம் ஆன அவர், பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ஆசிரமங்கள், கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடம், ரா ஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் உள்ளிட்ட ஆசிரமங்களில் தங்கி ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற அவர்,  1970-ஆம் ஆண்டின் இறுதியில் கு ஜராத் மாநிலத்திற்கு மீண்டும் வருகை தந்தார். 

1971-ஆம் ஆண்டு அடல் பிஹாரி வா ஜ்பாய் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற ஜனசங்க சத்தியாகிரக மாநாட்டில் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.  1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை கொண்டு வந்தபோது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கு ஜராத் மாநில லோக் சங்கர்ஷ் சமீதியின் பொதுச் செயலாளராக நரேந்திர மோடி செயல்பட்டார். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக அவர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டார். 

1979-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட நரேந்திர மோடி, அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் தீவிரப் பணியாற்றினார். 1986ல் அத்வானி பா ஜ.க. தலைவராக பதவியேற்ற பிறகு, பா ஜ.கவின் கு ஜராத் பிரிவின் அமைப்பு செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியின் ரத யாத்திரைகளை நரேந்திர மோடி திறம்பட ஒன்றிணைத்திருந்தார்.  1990ல் தேசிய தேர்தல் குழு உறுப்பினராக கட்சிக்குள் தடம் பதித்த அவர், 1995ல்  பா. ஜ.க.வின் தேசிய செயலாளராகவும். பின்னர் அவரின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக பா ஜ.க. அமைப்பின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

2001-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நரேந்திர மோடி, கு ஜராத் முதலமைச்சரானார். 

தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு வரை கு ஜராத் முதலமைச்சராக பதவி வகித்த  நரேந்திர மோடி,  2 ஆயிரத்து 63 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்து மாநில வரலாற்றில் சாதனை படைத்தார். 2002-ஆம் ஆண்டு கு ஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு ரயில் எரிப்பு நிகழ்வால் இவருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், இந்த சர்ச்சைகளை கடந்து 2014-ஆம் ஆண்டு 16-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வாரணாசி மற்றும் தோரா தொகுதிகளில் களமிறங்கிய அவர் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி கண்டார். பா ஜ.க.வின் மக்களவையில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட அவர், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார்.

இதன் பின்னர், 2019-ஆம் ஆண்டு 17-வது மக்களவைத் தேர்தலில் வரணாசியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, 2014ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். நிகழ்சியில் அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர் ஜி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் பின்னர் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமரானார் நரேந்திர மோடி. அவரது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படிக்க: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்; நிறைவேறத் தயாராகும் மசோதாக்கள்?