நாகர்கோவிலில் 50 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 50 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், அங்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

நாகர்கோவிலில் 50 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில் அப்பகுதியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவரும் நிலையில் தற்போது நாகர்கோயில் மாநகராட்சி தொகுதிக்குட்பட்ட கோட்டாறு,ராமன்புதூர்,  இறச்சகுளம் ஆகிய பகுதியில் டெங்கு காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது

அதன்படி அந்த பகுதியில் உள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீட்டில் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே அதேபகுதியில் 10க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 50க்கும் மேற்பட்டோரு க்கு  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனைதொடர்ந்து  நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சுகாதாரக் கேடுகள் நிலவி வருவதாகவும், அவற்றை சீர் செய்ய தற்போது பணியாளர்கள் அங்கு முடுக்கிவிடப்பட்டனர். மேலும் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.