"இந்தியாவில் 80%-க்கும் அதிகமான செவிலியர்கள் பெண்கள்" - பிரதமர் மோடி பெருமிதம்.

"இந்தியாவில் 80%-க்கும் அதிகமான செவிலியர்கள் பெண்கள்" - பிரதமர் மோடி பெருமிதம்.

இந்தியாவில்  80 சதவீதத்திற்கும் அதிகமான செவிலியர்கள் பெண்களாகவே உள்ளனர் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று பெண்கள் முன்னேற்றம் தலைப்பில் பிரதமர் உரையாற்றினார்.

அப்போது பழங்குடிப் பிண்ணயில் இருந்து வந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழிநடத்துவதாகவும், ஆண்களை விட பெண்களே உயர்கல்வியில் அதிகளவு சேர்வதாகவும் குறிப்பிட்டார்.

விமானப்படையில் பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்குவது அதிகரித்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிக்க   | செந்தில் பாலாஜி வழக்கு : இருதரப்பு வாதங்களும் இன்றுடன் நிறைவு!